2023-ல் ஒரு பிடிப்பே இல்லாம போய்ட்டு இருந்துச்சு, அப்ப தான் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லமா என் வாழ்க்கையில வந்தா "கருவாச்சி" எங்க பின்னாடி வீட்டு வளர்ப்பு நாய். முதல் தடவை பார்த்தப்போது அவளோட துருதுரு நடை அவ்வளவு அழகு, இன்னும் மறக்கல. அவளோட நிறம் கருப்பும்,வெள்ளையும் கலந்த நாட்டு நாய்.நான் கூப்பட்டவுடன் தயங்கி தயங்கி என்கிட்ட வந்தா,சின்ன வயதிலிருந்து நாய்கள் மேல பிரியம். நாங்க வளர்க்கல சித்தப்பா வீட்ல வளர்த்தாங்க, பெயர் "Tiger".நான் school-க்கு போனா என் பின்னாடியே வரும்,"Dogs are real angels". German Shepherd,Pomeranian புசுபுசு நாய்-னு நாங்க சொல்வோம், அதல்லாம் அப்ப வசதியான வீட்டுல வளப்பாங்க. சரி கருவாச்சி கதைக்கு வருவோம், அப்பறம் 2வது தடவை என்னை பார்த்து அவளே வர ஆரம்பிச்சுட்டா,ஏதோ பழைய பேப்பரை வாயால எடுத்து கொடுக்குறா,அத பார்த்த எனக்கு அவ்வளோ சந்தோஷம்,ரொம்ப நாள் கழித்து இந்த நிகழ்வு என் வாழ்க்கையில நடக்குது. I will cherish this moment forever in my life. 3வது தடவை நான் என் mobile-ல இயற்கை காட்சிகளை வீடியோ எடுத்துட்டு இருந்தேன். அப்ப கருவாச்சி வந்தா அவளையும் photo,video எடுத்தேன். சூரிய ஒளியில அவ தேகம் மினுமினு மினுக்கும்,அப்படி ஒரு அழகு. அப்பறம் எங்க வீட்டுக்கு வருவா,நானும் biscuit அந்த மாறி snacks கொடுப்பேன். நிறைய video,photo எடுத்தேன். அப்பறம் போனா 2023,24 எப்பயும் இல்லமா நல்லா மழை பொய்யதது,ஆதனால நிறைய நாள் பாக்கல.5,6மாசமா சுத்தமா ஆளயே காணும்.அப்பறம் இந்த வருசம் ஜனவரியில தான் பாத்தேன், 4குட்டி போட்டு அம்மாவா ஆகிட்டா. அதுல 2குட்டிய கொடுத்துட்டாங்க,2பெண் குட்டி தான் இருந்துச்சு. ஒன்னு வெள்ளை,இன்னோனு சேவல(brown). பொண்ணா பிறந்தா மனித பிறவிலும் சரி,மிருக பிறவிலும் சரி அவங்க முன்ன இருந்த மாறி உடல் அளவிலும்,மன அளவிலும் மாறியிருப்பாங்க. கருவாச்சியும் அப்படித்தான் அந்த மினுமினுப்பு எல்லாம் போய் இருந்தா.பெண்களுக்கு வர moodswings-யே இன்னும் சிலர்க்கு புரிதல் கிடையாது,இதுல எங்க கருவாச்சிய புரிந்துக்கொள்வார்கள். ஆனா அந்த 2குட்டிகளும் அவள மாறி அழகு, அவள மாறி என்னை பார்த்து பயந்து, அப்பறம் ஒட்டிக்கிட்டாங்க.வெள்ளை குட்டி மட்டும் தான் நல்லா பழகுனா. கொஞ்ச நாள் கழித்து பக்கத்து வீட்டல சேட்டை பன்றாங்கனு 2குட்டிகளையும் கொடுத்துட்டாங்க. கருவாச்சி மட்டும் தனியா இருந்தா,அவங்க வீட்ல ஆண் நாய்யும் இருந்தது. குட்டிகள் போனாலும் இவ எப்பையும் போல தான் இருந்தா. நான் கொஞ்சம் busy -யா இருந்துடேன்,ரொம்ப நாளா ஆள காணுமே-னு அவங்க owner-ட்ட கேட்டா,அவ எங்கயோ போய்ட்டானு சொன்னாங்க. அவங்க வீட்டிற்கு,2வீடு தள்ளி ஒரு பெண் நாய் இருந்தது.அது ஏற்கனவே ஒரு தடவை குட்டி போட்டுச்சு,இப்ப இந்த வீட்டு ஆண்ணோட mate பன்னி மறுபடியும் 4குட்டி போட்டுருக்கு.2குட்டிய கொடுத்துட்டாங்க. 2குட்டி இருந்துச்சு இப்ப 2வாரம் கழித்து ஒன்னு தான் இருக்கு. அது வெள்ள பெண் குட்டி கருவாச்சி குட்டி மாறி என்கிட்ட இப்ப ஒரு நாள்ல பழகிட்டா. என்னதான் புதுசு வந்தாலும் கருவாச்சியும்,அவ குட்டிகள் மாறி வராது.ரொம்ப அவள miss பன்றேன். கருவாச்சி இப்ப நினைக்கிறப்ப பெருமாள் முருகன் எழுதிய"பூனாச்சி" நினைவுக்கு வந்தது.பூனாச்சியும், என் கருவாச்சி மாறியே தான்.அந்த புக்க படித்தவர்களுக்கு தான் தெரியும்,நம்ம மாறி தான் அவங்களும்.அந்த புத்தகத்தின் மூலம் நிறைய விசயம் தெரிந்து கொண்டேன். பெருமாள் முருகன் அத உயிர்ப்போடு எழுதி இருப்பார்.
தனியார் பள்ளியில் ஊழல் பல விதமாக நடக்கிறது.அதில் சில நான் 6 to 12 வரை ஒரு தனியார் பள்ளியில் படித்தேன். ஆசிரியர்கள் எல்லாம் நல்ல ஆசிரியர்கள் தான்,ஆனா school management சரி இல்லை,அப்ப 11 படித்து கொண்டிருந்தேன். நாங்க fees1000 கட்னோம்.ஆனா அவர்கள் 25னு bill போட்டு வந்தது.ஏன் னு எங்கள் ஆசிரியர்களிடம் கேட்டதற்கு, நீங்கள் கேட்கற்தா இருந்தா தலைமை ஆசிரியரிடம் கேளுங்கள் என்று சொல்லி விட்டார்.




கருத்துகள்
கருத்துரையிடுக