முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Dorothy review

Initially, I thought Young Subbu was Rishikanth. We have grown up believing that bold and rugged characters are always men. But Karthik Subbaraj brilliantly twisted the plot, and that's when I realised that Rishikanth was actually Karthik. The movie was unexpected and beautiful, portraying the life of a transgender person with sensitivity. Growing up, we often saw transgender people clapping their hands on trains and buses. Shanadh’s character never feels overacted. He naturally portrays how a woman might talk, walk, and care for others.During my school days,I watched Chef Jacob’s show, and for the first time, I saw a transgender guest in the first episode.  Keerthy Suresh's death scene reminded me of   words can describe Maestro's world-class music! Rishikanth's introductory BGM and the song Muthumani transported me to another world. I'm completely blown away!

The Kingmaker

            2004-ல் நான் பார்த்த முழு தமிழ் படம்,என்னை பாதித்த படமும் இந்த (காமராஜ்)படம் தான்.படிக்காத மேதை,The kingmaker என அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டார்.இந்த படம் வந்து 21வருடம் ஆகிவிட்டது,இன்னமும் எனக்கு அரசியல் தலைவர் என்றால் என் நினைவுக்கு வருவது அது ஒருவர் தான்.20 வருடத்திற்கு பிறகு அவர் நினைவு வரும் போது இப்பொழுது வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர். அவர் இறந்த பிறகு அவர் செய்த நல்ல திட்டங்களை,அவர் கொள்கைகளை யாரும் நினைவில் வைக்காமல் அவர் பெயரோடு அவர் சாதியும் சேர்த்து பள்ளிகளுக்கு பெயராக வைத்து பிரபலமாகி விட்டார்கள்.காமராஜர் என்னமோ அவர்கள் சாதிக்கு மட்டும் தான் சொந்தம் என்பது போல் பேசிக்கொள்கிறார்கள் காலக் கொடுமை.

கல்வி ஒரு வியாபாரம்

முந்தைய காலத்தில கல்வி என்பது எல்லோருக்கும் கிடைக்காத ஒன்றாக இருந்தது. ஆனா இப்போ எவ்வளவு எல்லோருக்கும் எளிதாக கிடைக்கிறது,அது தரமானதா இருக்கிறதா என்பது சந்தேகம் தான். பெற்றோர்கள் பல லட்சம் கட்டி international school ல் சேர்க்கிறார்கள்.அது ஒரு பக்கம் இருக்க, எளிய மக்கள் அரசுப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்கிறார்கள். பல ஆசிரியர்கள் லஞ்சம் கொடுத்து வருகின்றனர்.அப்ப எதுக்கு அரசு தேர்வுகள் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்ன தான் tet தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தாலும்,சில அரசு உதவி பெறும் பள்ளிகளில் லஞ்சம் கேட்கிறார்கள். எங்கள் ஊரில் உள்ள ஒரு சாதி பெயர் கொண்ட தனியார் பள்ளியில் UG படித்து இருந்தால் 60லட்சம்,PG என்றால் 80 லட்சம் கொடுக்கனுமாம்.அதுவும் அவங்க சாதிகார்களுக்கு தான் முன்னுரிமையாம். சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பதவிற்கு கண் தொடைப்புக்கு interview வைத்து, அவங்க சாதியில் உள்ளவருக்கு அதுவும் 40 லட்சம் கட்டி தான் கொடுத்தார்கள்.இப்படி காசுக்கு விலை பேசுனா தரமானதா கல்வி எப்படி கிடைக்கும்.